இந்த சூரிய ஒளியின் மூலம் இயங்கக்கூடிய மோட்டார் பம்பு களை சோலார் மோட்டார் பம்ப் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மோட்டார் பம்புகள் அதன் குதிரை திறனை (Horse Power) HP பொருத்து வகைப்படுத்தப்படுகிறது. சூரிய ஒளி மின்சாரம் மூலமாக அனைத்து HP மின் மோட்டார்களை இயக்க முடியும். உதாரணமாக 1HP, 2 HP, 3HP, 5HP, 7.5 HP, 10 HP, 15HP, 20HP.
எந்த வகையான மோட்டார் பம்புகள் சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயக்க முடியும்
பொதுவாக மின் மோட்டார்களை நாம் கிணற்றிலோ அல்லது ஆழ்துளை கிணற்றில் பயன்படுத்துகிறோம். இதற்கு நாம்
- ஆழ்துளை நீர்மூழ்கி மோட்டார் - Submersiable Motor Pump
- கிணற்று நீர் மூழ்கி மோட்டார் - Openwel Motor pump
- மேல் மோட்டார் - Mono black Motor Pump
என்கின்ற மூன்று வகையான மோட்டார் பம்புகள் ஐ பயன்படுத்துகிறோம் இவை அனைத்தையுமே சூரிய ஒளி மின்சாரம் மூலமாக இயங்க வைக்க முடியும்.
எந்த துறைக்கு சூரிய ஒளி மின்சார பம்புகள் பயன்படுத்தப்படுகிறது
சோலார் மோட்டார் பம்புகள் அனைத்து துறைக்கும் பயன்படுத்தலாம் பெரும்பாலான சோலார் மோட்டார் பம்புகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது மேலும் நீச்சல் குளங்களை பராமரிக்கவும், கழிவு நீரை சுத்திகரிக்கவும், தொழிற்சாலைகளின் தேவைக்கும் இந்த சூரிய ஒளி மின்சார பம்புகள் பயன்படுத்தப்படுகிறது.
அரசின் இலவச மின்சார இணைப்பு கிடைக்கப்பெறாத விவசாயிகள் நீரின் தேவைக்காக பலவிதமான போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
அதில் சில பேர் டீசல் இன்ஜினை பயன்படுத்தி நீர் இறைக்கும் போது அதில் ஒரு பெரும் தொகையை டீசலுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.
அரசின் இலவச மின்சாரம் இருந்தாலும் பல நேரங்களில் மும்முனை மின்சாரம் கிடைக்காத காரணத்தினால் நீர் இறைக்க முடியாது அப்போது அவர்களின் நீரின் தேவை பூர்த்தி ஆகாது.
அடிக்கடி ஏற்படும் மின்சார தடை நாளும் அவர்களின் நீரின் தேவை பூர்த்தி அடையாது.
சோலார் மோட்டார் பம்ப் சிறப்புகள்
- சோலார் மோட்டார் பம்ப் பயன்படுத்தும்போது தினமும் குறைந்தது ஏழு மணி நேரம் தடையில்லா மின்சாரம் பெற முடியும்.
- அறிவிக்கப்பட்ட மின் தடை தற்காலிகமான மின்தடை மும்முனை மின்சார நேரத்திற்காக காத்திருக்க வேண்டாம்.
- சோலார் மோட்டார் பம்ப் பராமரிப்பது மிக எளிது
- மேலும் சூரிய ஒளி மின்சார மோட்டார் பம்பு களை அமைக்க ஒரு முறை முதலீடு செய்தால் போதும் குறைந்தது முப்பது வருடங்களுக்கு பயனளிக்கும்.
2 HP சோலார் மோட்டார் பம்ப்
Solar Water Pump Price Make 1HP Solar Water Pump Set Rs. 84,999 Renewsys, Texmo, Mitsubishi 2HP Solar Water Pump Set Rs. 1,44,999 Renewsys, Texmo, Mitsubishi 3HP Solar Water Pump Set Rs. 1,94,999 Renewsys, Texmo, Mitsubishi 5HP Solar Water Pump Set Rs. 2,89,999 Renewsys, Texmo, Mitsubishi 7.5HP Solar Water Pump Set
Rs. 3,79,999 Renewsys, Texmo, Mitsubishi 10HP Solar Water Pump Set Rs. 4,89,999 Renewsys, Texmo, Mitsubishi
Solar Water Pump | Price | Make |
1HP Solar Water Pump Set | Rs. 84,999 | Renewsys, Texmo, Mitsubishi |
2HP Solar Water Pump Set | Rs. 1,44,999 | Renewsys, Texmo, Mitsubishi |
3HP Solar Water Pump Set | Rs. 1,94,999 | Renewsys, Texmo, Mitsubishi |
5HP Solar Water Pump Set | Rs. 2,89,999 | Renewsys, Texmo, Mitsubishi |
7.5HP Solar Water Pump Set | Rs. 3,79,999 | Renewsys, Texmo, Mitsubishi |
10HP Solar Water Pump Set | Rs. 4,89,999 | Renewsys, Texmo, Mitsubishi |